ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும்- அண்ணாமலை

மறைந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி, பிள்ளைகள் படிப்பு செலவை பாஜக ஏற்கும். ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

மறைந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி, பிள்ளைகள் படிப்பு செலவை பாஜக ஏற்கும். ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு என்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி 21ம் தேதி சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து போர் நினைவு சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக பாஜகவினர் சென்றனர். இந்த பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ராணுவீரர்களின் ஆதரவு தேவை இருக்கிறதா என்று பார்த்து தான் அரசியல் கட்சிகள் ஆதரவு தரும் நிலை தமிழகத்தில் உள்ளது. ஓட்டு அரசியல் நடத்துபவர்களுக்கு சொல்கின்றேன் 15 லட்ச ஓட்டு ராணுவ வீரர்கள் ஒய்வு பெற்றவர்கள் ஓட்டு தமிழகத்தில் உள்ளது.

பிரதமரின் துணிச்சல் இதுபோன்ற செயல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வராது. ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிய போது பிரதமர் அபிநந்தனை தமிழர் என்று பார்க்கவில்லை. 24 மணி நேரத்தில் விடவில்லை என்றால் இந்திய ராணுவம் தாக்கும் என எச்சரித்தார்.

தமிழகத்தை தாண்டி தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் பார்த்து கொள்கிறோம். தமிழகத்தில் ஒரு ராணுவீரர் கொலை செய்யப்பட்டதற்கு ஒரு அறிக்கை கூட முதலமைச்சர் வெளியிடவில்லை. ராணுவ வீரர் பிரபு இறந்தது சின்னபிரச்சனை என யார் கூறினாலும் ஏற்க முடியாது.அபிநந்தனை இராணுவ வீரர் என்று தான் பிரதமர் பார்த்தார். தமிழர் என்று பிரதமர் பார்க்கவில்லை. எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பிரதமர் இப்படி தான் செய்து இருப்பார். வெளிமாநிலங்களில் நடைப்பெறும் போராட்டங்களில் நடைப்பெறும் தாக்குதல்களில் தமிழர்களில் அடிப்பட்டால் குறிபார்த்து தமிழர்களை தாக்கியதாக கூறும் முதலமைச்சர் ராணுவீரரின் கொலைக்கு எதிராக எதுவும் கூற வில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ரவுடிகளுக்கு கூட இந்த அரசை கண்டு பயம் இல்லை. முகமுடி போட்டு வெட்டியவர்கள் தற்போது முகத்தை சிசிடிவியில் காண்பித்து வெட்டுகிறார்கள். மெழுவர்த்தி போல் உங்கள் திமுக ஆட்சி நடைப்பெற்று வருகிறது. மெழுவர்த்தி எரிந்து உருக்குலைந்து போவது போல் உங்கள் ஆட்சி போகும் என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ராணுவம் வீரர் பிரபு இறந்தை கண்டித்து முன்னாள் ராணுவம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பிரபுவை போல் வேறு எந்த ராணுவ வீரர்களுக்கும் இதுபோல் நடக்க கூடாது.தமிழகத்தில் நடந்து விவகாரத்தில் முதலமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆளும் கட்சியினர் அழுத்ததினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிகழ்வுகள் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் உடன் ஆளுநரை சந்திந்து புகார் மனு அளிக்க உள்ளோம்.

முதலமைச்சர் மருமகன், மகன் அவர்களுக்கு யாரை புடிக்கிறதோ அவர்களுக்கு மட்டும் பதவி வழங்கபடுகிறது. மறைந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் உதவி, அவர்கள் பிள்ளைகள் படிப்பு செலவு பாஜக ஏற்கும். ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும்.

ஈரோடு கிழக்கு தேர்தலில் வாக்களர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. மத்திய தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தாலும் மக்கள் வரவேற்பார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நிச்சயமாக நடக்கும். இவர்கள் தடை செய்வதால் தங்களு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.