“ஜெயலலிதாவின் துணிச்சல், சமூகநீதி சிந்தனையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம்” – அன்புமணி!

ஜெயலலிதாவின் துணிச்சல், சமூகநீதி சிந்தனையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 78-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.

துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார். சட்டம் – ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69% இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார். முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.