GOLD RATE | தங்கம் விலை அதிகரிப்பு- இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்குப்போட்டியாக நேற்று உயர்ந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.