தொடர் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துவோம்- மீனவர்கள்

லூப் சாலை போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக மாறும். அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்வோம் என நொச்சிக்குப்பம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள்…

லூப் சாலை போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக மாறும். அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்வோம் என நொச்சிக்குப்பம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்குபகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

லூப் சாலை ஆக்கிரப்பு குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலைஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் கடந்த ஒரு வாரமாக லூப் சாலையில் சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலையில் போக்குவரத்தை முடக்கியுள்ளதாகவும், இதை சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தை மீறும் வகையிலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தும்படி, மீனவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் போராட்டம் குறித்து நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கான பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மீனவர்கள், லூப் சாலை போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக மாறும். அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்வோம். எங்களுக்கான போராட்டம், எங்கள் இடத்தை விட மாட்டோம் என முழக்கம். இது நம்ம மண். நம்முடன் மோதிப் போராடி ஜெயித்து விட்டு பின்னர் எடுத்துக்கொள்ளட்டும். மீன் கடைகளை வைத்துக் கொள்ள முறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் சொன்னாலும், நீதிபதிகள் அவர்கள் உத்தரவில் இருந்து பின் வாங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.