நடிகர் சிலம்பரசன், தனது ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார்.
சிலம்பரசன் நடிப்பில் பத்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவான பத்து தல திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது. இதில் இந்த படத்தில் சிம்புவுடன், கெளதம் கார்த்திக்,பிரியா பவானி சங்கர், கலையரசன், ஜோ மல்லூரி, கெளதம் வாசுதேவ் மேனன், டீஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து பத்து தல படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கட்ந்த வாரம் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்களின் ‘பத்து தல’ திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம்.
‘பத்து தல திரைப்படம் சிலம்பரசனின் திரைப்பயணத்தில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்கக்கூடிய படமாகவும் அமைந்ததுள்ளது.
இந்தப் பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து பொறுமையாக பயணித்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எங்கள் நன்றி என அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
https://twitter.com/prasannakarthi7/status/1648274408769822722?s=20
இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் இன்று தி நகரில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் சந்திப்பிற்கு வந்திருந்த ரசிகர்களுக்குச் சிம்பு பிரியாணியைத் தானே பரிமாறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.









