முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்’ – அன்புமணி ராமதாஸ் எம்.பி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 76-ஆவது விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் எம்.பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத் தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களிலிருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள் தான் என்பதில் ஐயமில்லை எனக் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நிலையில் நாம் இல்லை என்பது தான் இந்த மகிழ்ச்சியான நாளில் வருத்தமான உண்மை. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையடைந்த நாம், இப்போது போதை, மது, சூது ஆகிய மூன்று அரக்கர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ள அவர், ஆங்கிலேயர்களை விட இந்த சமூகக் கேடுகள் நம்மைப் பல மடங்கு கூடுதலாகச் சுரண்டுகின்றன. ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட உயிர், பொருளாதார இழப்புகளை விட இந்த அரக்கர்களால் ஏற்படும் இழப்புகள் அதிகம். ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற விடுதலையைப் போதை, மது, சூது ஆகிய அரக்கர்களிடம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான மனித வாழ்க்கை இந்த சமூகக் கேடுகளால் நரகமாக மாறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்துக’ – வைகோ எம்.பி’

சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, கவுரமான வாழ்க்கை உள்ளிட்ட மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை எனத் தெரிவித்துள்ள அவர், இத்தகைய சிறப்புமிக்க விடுதலையை இந்த நாடும், நாட்டு மக்களும் முழுமையான அனுபவிக்க வேண்டும் என்றால், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக் கொள்வோம் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

Halley Karthik

இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்ச

Web Editor

அடிக்கடி சண்டையிட்ட மனைவி; 80 அடி பனைமரத்தில் வசிக்கும் நபர்

G SaravanaKumar