முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த நடிகை மீனா – இன்ஸ்டா பதிவில் உருக்கம்

நடிகை மீனா உடல் உறுப்பு தானம் செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

நடிகை மீனாவுக்கும், பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில், நடிகை மீனா உடல் உறுப்பு தானம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு உயிரை காப்பற்றுவதை விட
வேறு எதுவும் சிறந்த விஷயம் கிடையாது. உயிரைக் காப்பாற்றும் அப்படி ஒரு உன்னதமான விஷயம்தான் உடல் உறுப்பு தானம். நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வரும்
பலருக்கு மறு வாழ்க்கை கொடுக்கும் ஒரு வரம். அதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்து இருக்கிறேன்.

என்னுடைய கணவருக்கும் யாராவது அப்படி செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கை மாறி இருக்கும். ஒரு உடல் உறுப்பு தானம் எட்டு உயிர்களை காப்பாற்றும். அனைவருமே
உடல் தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருக்கும்
விஷயம் கிடையாது. இது குடும்பம், உற்றார் உறவினர்கள் போன்ற அனைவருக்கும் சம்பந்தப்பட்டது.

 

இன்று நான் என்னுடைய உடல் உறுப்பை தானம் செய்ய உறுதிமொழி எடுத்து இருக்கிறேன். இதுவே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும் என நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும்”: கமல் ஹாசன்

Vandhana

பாடப்புத்தகத்தில் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர்; அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

G SaravanaKumar

ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம், கூட்டணிக்கு பலம் சேர்க்கும்- சி.டி.ரவி!

Jayapriya