“உள்ளூர் மளிகைக் கடைக்கும் முதல்வர் போகட்டும்” – மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் விஜய் உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு ஊள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பணவீக்கம் 6.81% சதவிதமாக உள்ளது. தமிழ்நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்…

அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்பார்.

மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.