கேப்பிட்டலேண்ட் தரவு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய்!

அம்பத்தூரில் உள்ள கேப்பிட்டலேண்ட் நிறுவனத்தின் தரவு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆனதில் இருந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கை வைத்து வருகிறார். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் சென்னை போந்தமல்லி – வடபழ்னி மெட்ரோவை திறந்து வைத்தார். நேற்று சோழிங்கநல்லூரில் ரூ.3,108.55 கோடியில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் இன்று சென்னை அம்பத்தூரில் சிங்கப்பூர் கேப்பிட்டலேண்ட் நிறுவனத்தின் தரவு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்காக அம்பத்தூர் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் விஜய்க்கு, சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து 4 ஏக்கர் பரப்பளவில் 56 மெகாவாட் மின்சாரத்திறன் கொண்ட தரவு மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.