தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 11,993 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 23,084 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 2,054ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 1,696 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 813 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,159 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 716 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,198 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 481 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 336 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 410 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 568 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








