நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் மாலை 6.30 மணிக்கு வெளியானது.
இந்த லியோ திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ்மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். வழக்கமாக விஜய் பட டிரெய்லர் வெளியானால், ரசிகர்களை சந்தோச படுத்த, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரிய, பெரிய திரையரங்குகளில் அதற்கான ஒரு பெரிய ஸ்பெஷல் ஸ்கிரீன் அமைப்பது வழக்கம்.
அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் திரையிடபட்டது. திரையரங்கு வாசலில் 1000 திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் டிரெய்லரை கண்டு ரசித்தனர். மேலும் திரையரங்கின் வாசலில் பட்டாசுகளை வெடித்து தளபதி, தளபதி என்ற கோஷங்களை எழுப்பினர்.
ரோகிணி திரையரங்கில் ஒரு திரையில் மட்டும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், திரையரங்கின் இருக்கைகளை உடைத்து துவம்சம் செய்தனர்.
இதே போன்று சென்னை அடுத்த தாம்பரம் வித்யா திரையரங்கில் லியோ டிரெய்லர் திரையிடப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர் திரையரங்கில் குவிந்தனர். லியோ டிரெய்லர் வெளீயிட்டை பட்டாசு வெடித்தும், வாணவேடிக்கை, மேளதளத்துடம் விஜய் ரசிகர் கொண்டாடினர். கேக் வெட்டியும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடினர். இந்நிலையில், 3 நிமிட டிரெய்லர் காட்சிக்கு திரையரங்கு சார்பில் 150 கட்டணம் வசூலிப்பதாக ரசிகர் குற்றம் சாட்டினர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மஹாலில் லியோ திரைபட டிரெய்லர் வெளியீடை நகர இளைஞரணி சார்பில் கேக் வெட்டி கொண்டாடி எல் இ டி திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதே போன்று, மதுரை பழங்காநத்ததில் உள்ள திரையரங்கில் கொட்டும் மழையிலும் ரசிகர்கள் உற்சாக கொண்டாடினர். லியோ திரைப்படத்தை வரவேற்க்கும் விதமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேள, தாளத்துடன் நடனம் ஆடினர்.
கரூரில் லியோ டிரெய்லர் சிறப்பு காட்சி வெளியிடபட்ட திரையரங்கில் அரங்கம் நிறைந்து இருந்தது. அப்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி ராம் முத்துராம் திரையரங்கில் நடிகர் விஜயின் ரசிகர்கள் விளம்பர பதாகைகளுக்கு பால் ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுனர். பின்னர் டிரெய்லர் திரையிடப்பட்டதை அடுத்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்தனர்.







