ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ரசிகர்கள் வீசிய தேசியக் கொடியை கீழே விழாமல் தாவிப் பிடித்தார். இந்த விடியோ இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு 2023ல் இந்திய வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றதன் முந்தைய சாதனையை இந்தியா புதன்கிழமை முறியடித்தது. 2018ஆம் ஆண்டு ஜகார்த்தா ஆசியப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது.
இந்திய வீரர்கள் சரித்திரம் படைத்து தங்களது பழைய சாதனையை முறியடித்தனர். இதுவரை 82 பதக்கங்கள் இந்தியாவின் கணக்கில் வந்துள்ளன. புதன்கிழமை, இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்தார். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா மீண்டும் நாட்டுக்கு தங்க வெற்றியை தந்தார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/coolfunnytshirt/status/1709558083855482912
தங்கம் வென்ற பிறகு, நீரஜ் சோப்ரா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த மைதானத்தில் இருந்த பார்வையாளர்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செல்கிறார். இதற்கிடையில், இந்திய ரசிகர்கள் மூவர்ணக் கொடியை தங்கள் முன்னால் வீசினர். அதேசமயம், நீரஜ் சோப்ரா, இந்தியக் கொடி தரையில் விழாமல் இருக்க விரைவாக இந்தியக் கொடியைப் பிடிக்கிறார். நீரஜ் சோப்ராவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







