2026-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குச் சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பாராட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கல பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




