முதலமைச்சர் விஜய் தலைமையில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பாராட்டு விழா!

முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

2026-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குச் சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பாராட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்ற வீரர்களின் சாதனையை கவுரவிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.