பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். லெஜண்ட் சரவணன், இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற மோசலோ மோசலு என்ற பாடல் ஏற்கனவே யூ-டியூப் தளத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலை படக்குழு யூ-டியூப் தளத்தில் நேற்று வெளியிட்டது. அந்தப் பாடல் வாடி வாசல் எனத் தொடங்குகிறது. இந்தப் பாடலை சிநேகன் எழுதியுள்ளார். பென்னி தயால், ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நடனம் ராஜு சுந்தரம் அமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி நடனம் ஆடியுள்ளார். பாடல் வெளியான ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான முறை கண்டு ரசிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இசை மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படத்துக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசைக்காகவே இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம் போலிருக்கிறது என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.








