அபிராமம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் காதலனின் தாயை வெட்டி கொலை செய்த காதலியின் தந்தையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவியா (வயது 20), அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித்தை (வயது 24) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் சமிபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்ணின் தந்தை கண்ணாயிரம் என்பவர் ஆத்திரத்தில் வினித் என்பவரின் தாய் ராக்கை (வயது 53) சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவுடன் அபிராமம் காவல் ஆய்வாளர் கலைவாணி சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்ணின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கொலை செய்த கண்ணாயிரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








