ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” அடைந்துள்ளதாக மத்தியஸ்தம் செய்யும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனலும் ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் குறைய வில்லை.
இந்த நிலையில் இஸ்ரேலிலிருக்கும் வெளியேறுமாறு தமது தூதரகப் பணியாளர்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் தாக்குதல்களைத் தொடுக்கலம் என்ற பதற்றமான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.







