பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே…

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்து விட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கியுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு பள்ளி வந்து செல்வதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.