முக்கியச் செய்திகள் தமிழகம்

உருவாகிறது புதிய புயல் சின்னம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதை அடுத்து,  19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. இதனால் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகக் கூடும் என்றும் அது திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16- ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement:
SHARE

Related posts

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Halley karthi

தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

Gayathri Venkatesan

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!

Halley karthi