முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி, சேதமுற்ற பயிர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்கிறார்.

மழைவெள்ளத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை ஆய்வு செய்வதற்காக,கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெரியசாமி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த அதிமுக ஆட்சியில், ஆறுகள், குளங்களை தூர் வாராமல் வெற்று விளம்பரத்தை மட்டும் தேடிக் கொண்டதாக குற்றஞ்சாட்டினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் சம்பா,பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் உறுதி கூறினார்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களின் பாதிப்புகளை முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றார். இன்று காலை எழரை மணிக்கு காரில் புறப்பட்டு கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம்; ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார். காலை 9:30க்கு சிதம்பரத்தில் காலை சிற்றுண்டி அருந்தும் முதலமைச்சர், பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில், இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளுக்கு சென்று, நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.

காலை 11:30க்கு நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கனி, அருந்தவபுலம்; பகுதிகளிலும், தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், ராயநல்லூர், புழுதிக்குடி ஆகிய பகுதகளை பார்வையிட்டு மன்னார்குடி திரும்புகிறார். மன்னார்குடியில் மதிய உணவு உட்கொள்ளும் அவர், மாலை 3.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம், பெரியக்கோட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் இரவு சாலை மார்க்கமாக காரில் சென்னை திரும்புகிறார்.
……….

Advertisement:
SHARE

Related posts

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட்

Gayathri Venkatesan

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் டெல்லி!

Ezhilarasan

நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை; அமைச்சர் ஐ.பெரியசாமி

Halley karthi