முக்கியச் செய்திகள் விளையாட்டு

பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்

ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ட்வைன் பிராவோவின் சாதனையை, ஹர்ஷல் பட்டேல் சமன் செய்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றின் முதல் போட்டியில் நேற்று மோதின. இதில், பெங்களூரு அணியின் தோல்வியை தழுவியதால், தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் இந்தத் தொடரில் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ சாதனை படைத்திருந்தார்.

2013-ம் ஆண்டு சென்னை அணிக்கு விளையாடிய பிராவோ அந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒரு ஐ.பி.எல் தொடரில், ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிக விக்கெட்டுகள் அதுதான். அந்தச் சாதனையை ஹர்ஷல் படேல் நேற்றைய போட்டியில் சமன் செய்துள்ளார்.

பிராவோ, ஹர்ஷல் பட்டேலுக்குப் பிறகு ரபாடா 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கடந்த 2020 ஆண்டு அவர் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டு தொடரில் 27 விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

Halley karthi

சசிகலா அதிமுகவில் இணைக்கப்படுவாரா? -ஜெயக்குமார் பதில்

Niruban Chakkaaravarthi

பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Gayathri Venkatesan