ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிடரின் உடலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, பாலம் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரதமர் மோடி, பிபின் ராவத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மதுலிக்கா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடங்கிய பெட்டிகளுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர்கள் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் பிரிகேரிடியர் லக்விந்தர் சிங் லிட்டரின் உடல் டெல்லி பிரார் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவம், விமானப்படை, கடற்படை அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். லிடரின் கனைவி உள்ளிட்ட குடும்பத்தினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.