மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பாக்யராஜின் மறைவுக்கு பல்வெறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியில் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு.கஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் நாளை மதியம் 1:30 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.