பெருந்துறை தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – 1008 பெண்கள் ஒரே வண்ண புடவை அணிந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்!

பெருந்துறை அருகே தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் பகுதியில் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…

பெருந்துறை அருகே தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் பகுதியில் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், நேர்த்திகடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில், இந்த கோயிலில் கும்பாபிஷேக திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒருங்கிணைந்து தீர்த்த குடங்களை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் கேரளா கெண்டை மேளம் முழங்க, பம்பை மேளதாளங்களுடன், அலங்கரிக்கப்பட்ட நடன குதிரைகள், காங்கேயம் காளைகள், பசு மாடுகள், குதிரைகள் மற்றும் யானையுடன் 1008 பெண்கள் ஒரே மாதிரியான வண்ண புடவை அணிந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் அம்மன், சிவன், காளி உள்ளிட்ட வேடம் அணிந்து வந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.