லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 64வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று (மே 14) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அபிஷேக் போரல் மற்றும் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஷாய் ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், அபிஷேக் போரல் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரிஷப் பந்த் 33 ரன்கள், ட்ரிஸ்டன் 57 ரன்கள் அக்ஸர் படேல் 14 ரன்கள் என 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 208 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டன், அக்ஸர் இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையும் படியுங்கள் : சொந்தமாக வீடு,கார் இல்லை..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இதனையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் வெறும் ஐந்து ரன்களுடன் அவுட் ஆகினார். குயின்டன் டி காக் 8 பந்துகளில் 12 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். தீபக் ஹூடா ஒரு ரன்கள் கூட எடுக்காமலும், ஆயுஷ் பதோனி ஆறு ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 67 ரன்களை குவித்து அசத்தினார். குருனல் பாண்டியா 18 ரன்கள், அர்ஷத் கான் 58 ரன்கள், யுத்விர் கான் 14 ரன்கள், ரவி பிஸ்னோய் 2 ரன்கள், நவீன் உல் ஹக் 2 ரன்கள் என 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது வெற்றியை பதிவு செய்தது.