கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் தென்னந்தோப்பு அமைப்பதற்காக குழிகள்
வெட்டும் போது ஒன்றரை அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன 12 கிலோ எடையுள்ள பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் ஜானகி அம்மாள் உள்ளிட்ட 7 பேருக்கு
சொந்தமான இடத்தில் தென்னந்தோப்பு அமைப்பதற்காக குழிகள் வெட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் தென்னம்பிள்ளை வைப்பதற்காக குழி வெட்டும்போது ஒன்றரை அடி உயரமுள்ள 12 கிலோ எடையிலான நின்ற கோலத்தில், உலோகத்தால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இது எந்த காலத்தைச் சேர்ந்தது என்றும் ,எத்தகைய உலோகத்தால் செய்யப்பட்டது என்பது குறித்தும் உரிய விசாரணைக்கு பிறகு தெரியவரும் என வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது தொன்மையான இந்த சிலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ரெ. வீரம்மாதேவி
கும்பகோணம் அருகே கிடைத்த 12 கிலோ எடை உலோக பெருமாள் சிலை!
கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் தென்னந்தோப்பு அமைப்பதற்காக குழிகள் வெட்டும் போது ஒன்றரை அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன 12 கிலோ எடையுள்ள பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் ஜானகி…






