மும்பையின் கோரேகானில் உள்ள கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 39 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கூறுகையில், “மும்பையின் கோரேகானில் உள்ள ஜி + 5 கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 46 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 7 பேர் தீயில் கருகி இறந்தனர்.
ஆசாத் மைதானம் அருகே எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ, லெவல் 2 வகையைச் சேர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 39 பேர் HBT மற்றும் கூப்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







