சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!

சென்னை புழல் அருகே சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் இவர் சென்னை தாம்பரத்தில்…

சென்னை புழல் அருகே சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் இவர் சென்னை தாம்பரத்தில் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது புழல் சைக்கிள்
ஷாப் மேம்பாலம் அருகே காரின் முன்பக்கத்தில் என்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு
கார் பற்றி எரிந்தது .

உடனடியாக காரில் இருந்து இறங்கிய காளிராஜ் இதுகுறித்து செங்குன்றம் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை போராடி அணைத்தனர் இதில்
கார் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் காளிராஜ் உயிர் தப்பினார் .

காரில் தீ பிடித்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.