பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த சட்டப் பேரவை தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தை பிடித்திருந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு பிறகு, மகளிருக்க மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி, செப்டம்பர் மாதம் வழங்கப்படும் முதல் தவணையில் 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000 வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். தகுதியுடைய மகளிருக்கே ரூ.1000 வழங்கப்படும் என மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அண்மைச் செய்தி : ’இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ – பஞ்சாப் காவல்துறை தகவல்
இதற்கு பதிலளித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் அறிவித்த ரூ. 15 லட்சத்தை அண்ணாமலை வாங்கி வரட்டும்; முதல்வரிடம் பேசி மகளிர் உரிமைத் தொகை 28 மாத நிலுவைத் தொகையினை வாங்கித் தருகிறேன்; அண்ணாமலைக்கும் எனக்கும் இது ஒரு சவாலாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.