’இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ – பஞ்சாப் காவல்துறை தகவல்

சீக்கிய மதபோதகரும் ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை  உருவாக்கும் பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து…

சீக்கிய மதபோதகரும் ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை  உருவாக்கும் பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை அங்குள்ள பிரிவனைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பை நடத்திவரும் அதன் தலைவரான அம்ரித் பால் சிங்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளார். இவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை களமிறங்கியுள்ளது.

கடந்த மாதம் அம்ரித்பால் சிங் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர்.  இந்த சூழலில், பஞ்சாப் அரசு, அம்ரித்பாலுக்கு எதிராக நடத்திய தீவிர சோதனையில் அவர் தலைமையிலான ஒரு அமைப்பைச் சேர்ந்த 78 உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அம்ரித்பால் சின் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்தி: கெளதம் கார்த்தியின் ’ஆகஸ்ட் 16, 1947’ – டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

அவரை பிடிக்க தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதால் அதிகாரிகள் பல இடங்களில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு `ஆனந்த்பூர் கல்சா ஃபெள்ஜ்’ என்ற போராளி இயக்கத்தை உருவாக்க முயற்சிப்பதாக பஞ்சாப் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் பங்கும் உள்ளதாக பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.