சென்னை கே.கே நகர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பகவான் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் 8-வது நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கே.கே நகர், எம்.ஜி. ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பகவான் ஶ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்தில் தொடங்கி சிறப்பு அபிஷேகம், மகாதீப ஆராதனை, அன்னதானம், சந்தன காப்பு, புஷ்ப அலங்காரம், தீப ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கோயிலில் காலை முதல் பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து கிருஷ்ணரை வழிபட்டு செல்கின்றனர்.
ரூபி.காமராஜ்







