கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
சென்னை எம் ஜி ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பகவான் ஶ்ரீ கோகுல கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணர் ஜெயந்தி என்பதால் காலையில் இருந்தே பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.







