‘இந்தியா’ என்ற பெயரை மாற்றுவது, 30 ஆண்டு காலை உணவு திட்ட செலவுக்கு சமம்: சு.வெங்கடேசன் எம்.பி.

இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகும் செலவான ரூ.14,000 கோடி, தமிழ்நாட்டின்  1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை…

இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகும் செலவான ரூ.14,000 கோடி, தமிழ்நாட்டின்  1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியானது இந்தியா என்ற பொருள்படும் வகையில் இருக்கிறது. இந்த பெயருக்கு ஆரம்பத்தில் இருந்தே பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என அச்சிடப்பட்டுள்ளது. இதேபோல் ஜி 20 விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் சாசனத்தின் முதல் வரியான “இந்தியாவின் மக்களாகிய நாங்கள்” ( We, the people of India) மீதே பாஜக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ.14,000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் திட்டச் செலவுக்கு சமம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.