கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிக்க…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் பழைய சந்தைக்கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

Ganja

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த இருவரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்தது உறுதிபடுத்தபட்டது.

மேலும் விசாரணையில் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள கறிக்கடையில் வேலை பார்க்கும் நாகராஜ் (வயது 36) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லிபின் (வயது 31) என்பதும், அவர் தற்போது மேட்டுப்பாளையத்தில் தங்கி பூக்கடையில் பணிபுரிவதாகவும் தெரிவிந்தது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Mettupalayam police station

கடந்த சில தினங்களுக்கு முன்  மேட்டுப்பாளையத்தில் 15.200 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் நேற்று அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 5.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.