மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி பாஜக எதிர்க்கும்: மாநிலத் தலைவர் சாமிநாதன்

மேகதாது அணைக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லாஸ்பேட்டை தொகுதி பாஜக சார்பில் செயற்குழு கூட்டம் லாஸ்பேட்டையில் உள்ள…

மேகதாது அணைக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லாஸ்பேட்டை தொகுதி பாஜக சார்பில் செயற்குழு கூட்டம் லாஸ்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரி மக்கள் நலன் பாதிக்கக்கூடிய எந்தவித திட்டத்தை புதுச்சேரி பாஜக எதிர்க்கும் என்றும், மேகதாதுவில் அணை கட்டினால் புதுச்சேரி விவசாயிக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துகூறுவோம் என்று தெரிவித்த அவர்,

இது தொடர்பாக புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் பாஜக துணை நிற்கும் எனத் தெரிவித்த சாமிநாதன் அணை கட்டுவதற்கு தடை விதிக்ககோரி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.