இலங்கை பேட்டிங்: இந்திய அணியில் சூர்யகுமார், இஷானுக்கு வாய்ப்பு

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு…

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இதனால், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 2-ம் தர கிரிக்கெட் அணி, இலங்கை சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி- 20 தொடரில் விளையாடுகிறது.

முதல் ஒரு நாள் போட்டி, கடந்த 13 ஆம் தேதி தொடங்க இருந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய இலங்கை அணியில், பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் உட்பட 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டு இன்று தொடங்கியுள்ளது.

இலங்கை அணியின் கேப்டன் குசல் பெரேரா இந்த தொடரில் இருந்து விலகியதால், புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அணியில் பனுக ராஜபக்சே அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

https://twitter.com/BCCI/status/1416691495369732099

இந்திய அணியில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா ஆடி வருகின்றனர்.

https://twitter.com/BCCI/status/1416687215808106500

அணி விவரம்:

இலங்கை:
தசுன் சனகா (கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ,, மினோத் பனுகா (விக்கெட் கீப்பர்), பனுகா ராஜபக்சே, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, இசுரு உதடா, லஷ்கன் சண்டகன், துஷ்மந்தா சமீரா, சமிகா கருணாரத்னே.

இந்தியா:

ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், சாஹல்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.