ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று சந்திக்க உள்ளனர்.
கோடநாடு விவகாரத்தில் மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுகவினர், பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.திமுக அரசு அதிகார பலத்தால் பொய் வழக்கு போட்டு, எதிர்க்கட்சிகளை நசுக்குகிறது என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
கோடநாடு விவகாரம் குறித்து பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில், திட்டமிட்டு பொய் வழக்குப்போட்டு அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய திமுக வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.
அதிமுகவினர் இன்றும் சட்டப்பேரவையை புறக்கணிக்கப் போவதாகக் கூறியுள்ள நிலையில், இன்று காலை 11 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்திக்க உள்ளனர். அவர்களோடு அமைச்சர்களும் ஆளுநரை சந்திக்கின்றனர். அப்போது, கோடநாடு விவகாரம் குறித்து மனு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறத








