வருகின்ற 23ம் தேதி மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானத்திற்கு அதிகாரப்பூர்வமாக பட்டம் சூட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த 292வது ஆதீனத்திற்கு குரு பூஜை முனிச்சாலை பகுதியில் ஆதீனம் நல்லடக்கம் செய்யபட்ட இடத்தில் நடைபெற உள்ளதாகவும், இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பலர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆதீனம் தரப்பு அறிவித்துள்ளது.
அதே போல மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிக்கு பட்டம் சூட்டு விழா நடைபெற உள்ளது. இன்று அதிகாலை நித்தியானந்தா 293வது ஆதீனமாக நான் பதவி ஏற்றுக் கொண்டேன் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதினம் தரப்பு அதிகாரபூர்வமாக 293வது ஆதீனமாக யார் என்றும்? அவருக்கு எப்போது பட்டம் சூட்டும் விழா நடைபெறுகிறது என்பது குறித்தும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.








