அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில்…

எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 47 முதுநிலை திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், ஏற்கனவே பணியில் இருக்கின்ற ஓய்வு பெறாத எந்த அர்ச்சகரையும், எந்த திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அப்படி எங்காவது நடந்திருந்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார். காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கின்றோம் என்றும், ஆகம விதிபடி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்றும் குறிப்பிட்டார்.

60 வயதைக் கடந்தவர்கள் பல திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியில் இருக்கும்போது 35 வயதிற்கு உட்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.