கோடநாடு வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு…

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள…

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி காவல் துறையினர் இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை இடைக்கால அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கனது இன்று உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் இல்லாததால் குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் விசாரணையானது நடைபெற்றது.
அப்போது விசாரணையை மேலும் விரிவுபடுத்த சிபிசிஐடி காவல் துறையினர் தலைமையில் கூடுதல் கால அகவாசம் கேட்கப்பட்டதால் வழக்கினை  செப்டம்பர் 8ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.