குளு குளு சீசன் – கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சீசன் இன்னும் இரண்டு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மலைகளின் இளவரசி…

கொடைக்கானலில் சீசன் இன்னும் இரண்டு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டத் தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பகலிலும் அவ்வப்போது மழை பெய்வதால், அங்கு குளு குளு சீசன் நிலவி வருகிறது.

குறிப்பாக பைன் பாரஸ்ட் மற்றும் குணா குகை போன்ற வனப் பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ந்து வருகின்றனர். வருகின்ற நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம், மழைக்கு ஒதுங்குவதற்கு நிழற்குடை போன்ற முக்கிய தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

– ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.