மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி; அமைச்சர் கே.என்.நேரு

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளதாக மானிய கோரிக்கை பதிலுரையில் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்தும்…

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளதாக மானிய கோரிக்கை பதிலுரையில் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நாளிதழ்கள் மட்டுமில்லாமல், ரஷ்யா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள பத்திரிக்கைகள் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய திட்டங்களை புகழ்ந்து எழுதியுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஒரு மாநிலத்திற்கு வழிகாட்டியாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டிற்கு வழிகாட்டியாக முதலமைச்சரின் திட்டங்கள் இருப்பதால் பிரதமராகும் தகுதி முதலமைசச்ர மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு புகழாரம் சூட்டினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.