பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பொருநை அருங்காட்சியம் தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் முதலமைச்சரின் முடிவு தமிழர் வரலாற்றில் மைல்கல் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நடைபெறுவதாகவும், கீழடி நாகரிகம் கி.பி. 6-ம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளதாகவும் அவர் கூறினார். பெருநை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பொருநை நாகரிகம் தமிழ் சமுதாயத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டு எனக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மௌரியப் பேரரசுக்கு முந்தைய காசு கீழடியில் கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், கி.மு. 8-ம் நூற்றாண்டிலேயே கொற்கை வளர்ச்சி பெற்ற துறைமுகமாக இருந்துள்ளதாக கூறினார். பொருநை நாகரிகம் தமிழ் சமுதாயத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டு எனக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் வரலாறு தொடங்குவதாக குறிப்பிட்டார்.