பிரம்மாண்டமாக நடந்து வரும் கே.எல்.ராகுல் திருமணம் – பாலிவுட் பிரபலங்கள் வருகை

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் மும்பையில் உள்ள பண்னை வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.லோகேஷ் ராகுல் எனும் பாலிவுட் நடிகர்…

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் மும்பையில் உள்ள பண்னை வீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.லோகேஷ் ராகுல் எனும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான  அதியா ஷெட்டியை  காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோரான சுனில் செட்டியின் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வந்தன.

மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான  பண்ணை வீட்டில் கே.எல். ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்எனவும் மிக முக்கியமான பாலிவுட் மற்றும் கிரிக்கெட்  பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட் கோலி மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் பங்கேற்க உளளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் தரப்பிலிருந்து சூப்பர் ஸ்டார் சல்மான் கான், ஜாக்கி ஷுரூஃப் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுனில் ஷெட்டி திருமணம் குறித்த அறிவிப்பை ரகசியாமாக வைத்திருந்ததாகவும் திருமணத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி திட்டமிட்டுள்ளதாகவும் மராட்டிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் எனும் மருதானி வைக்கும் நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடைபெற்றதாகவும் அதில் ஏ.ஆர்.ரகுமானின் “அரபிக் கடலோரம்” பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் இசைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.