காற்றில் பறந்து சிக்ஸரை தடுத்து மாஸ் காட்டிய கே.எல்.ராகுல்!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட 20-20 தொடரில், நேற்றைய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் 20-20 போட்டி…

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட 20-20 தொடரில், நேற்றைய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் 20-20 போட்டி அஹமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தனர்.

125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை சேர்த்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் இங்கிலாந்து அணியில் நான்காவது ஒவரில் களமிரங்கிய ஜோஸ் பட்லர், அக்சர் பட்டேல் பந்தை எதிர்கொண்டு விளையாடிய போது, பவுண்ட்ரி நோக்கி தூக்கி அடித்த பந்தை. கே.எல்.ராகுல் பவுண்ட்ரி எல்லையில் பறந்து பந்தை லாவகாமாக தடுத்த காட்சி ரசிகர்கள் இடையே பெறும் நெகிழ்ச்சியை எற்ப்படுத்தியது. மேலும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டடு, ராகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.