எடையை குறைத்த கிம் ஜாங் உன்: பரபரப்பாகும் விவாதம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், உடல் எடை குறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவரும், நிலையில், அது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா நாட்டின் அதிபராக, 37 வயதான கிம் ஜாங் உன்…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், உடல் எடை குறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவரும், நிலையில், அது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா நாட்டின் அதிபராக, 37 வயதான கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அதிபராக பதவியேற்றது முதல், கிம் ஜாங்கின் உடல் எடை, தொடர்ந்து அதிகரித்து வந்தது. உடல் பருமன் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிம் ஜான் உன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில், கிம் ஜாங் உன் உடல் மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறார். இதனால், கிம் ஜாங் உன், தாமாகவே உடல் எடையை குறைத்திருக்கலாம் என்றும், உடல் நலக்குறைவு காரணமாக எடை குறைந்திருக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எனினும், அரசு தரப்பில் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதிபரின் உடல் எடை குறைந்துள்ளதால், தாங்கள் கவலையில் ஆழ்ந்தள்ளதாக அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கிம் ஜான் உன் குறித்து, அவ்வப்போது, வதந்திகள் வெளியாகி அடங்குவது வாடிக்கை. கடந்த 2014-ம் ஆண்டு திடீரென கிம் ஜாங் உன் மாயமானார். அப்போது, அவர் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், மீண்டும் அவர் மக்கள் முன்னிலையில் தோன்றினார். இதேபோன்று, கடந்த ஆண்டும் அவர் திடீரென மாயமானார். அப்போதும் இதேபோன்ற வதந்திகள் பரவிய நிலையில், அவர் மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.

வடகொரியாவில், கிம் ஜாங் உன்னுக்கு எதிர்மறையாக எந்த செய்திகளும் வெளியிடப்படாது என்பதால், உடல்மெலிந்த வீடியோக்கள், அவரது அனுமதியுடனே வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும், அவர் தாமாகவே முன்வந்து எடையை குறைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.