காரில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மதுரவாயல் அருகே கடந்த 6 ஆம் தேதி, ஓட்டுநரை தாக்கி காரில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரில் சென்று கொண்டு இருந்த பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறைத்து நகை பணத்தை பறிச்சதும் மட்டுமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுரமான செயலில் ஈடுபட்ட ஏழு நபர்களில் ஒருவர் 17 வயது சிறுவன். அதே போல் மற்றொரு சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறி, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை நோக்கி நகர்கிறதா தமிழ்நாடு என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது மதிக்கதக்க பெண். இவர் கடந்த திங்கட்கிழமை விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் அருப்புக்கோட்டை செல்வதற்காக, தனது நண்பர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் மற்றும் காரில் 7 பேர் கொண்ட கும்பல், பின்தொடர்ந்து வந்துள்ளது. வாகன ஓட்டம் குறைவான பகுதிக்கு கார் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த கும்பல், ஓட்டுநரை தாக்கிவிட்டு, பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு, காரில் இருந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்குள், கடத்திச் சென்றனர். அந்த பெண் அணிந்திருந்த, நகைகளை பறித்துக்கொண்டு, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் காயமடைந்த அவரது நண்பர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில், நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக சுங்கச்சாவடி, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, 17 வயது சிறுவன் உட்பட ஐந்து நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகை செல்போன் பணம் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளானர். மேலும் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் நகர் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். வழிப்பறி மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் யார், அவர்கள் குறித்த வபரங்களை முழு விசாரணைக்கு பிறகு தெரிவிக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.







