சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது. இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் விதமாக நேற்று முன் தினம் சூர்யா -சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்றது.இயக்குனர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படம் 2 பாகங்களாகவும் 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் சூர்யா உள்ளிடோர் பகிர்ந்துள்ளனர். மேலும் இப்படத்தில் கதாபாத்திரங்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.