மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

தூத்துக்குடி அருகே பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‌ தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல்…

தூத்துக்குடி அருகே பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‌

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள
முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்கையாக நடைபெறும்.   அந்த வகையில் இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியீடு!

தூத்துக்குடி ஜெயலானி தெருவில் உள்ள பீர் முஹம்மது அப்பா தர்ஹாவில் இருந்து
கொடி ஊர்வலமாக மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்ஹாவுக்கு கொண்டுவரப்பட்டது.  பின்னர் நாட்டில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாத்திட மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது.   இதை தொடர்ந்து அப்பா தர்ஹாவில் கொடியேற்றினர்.   இதில் அனைத்து மதத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.