இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா; கெவின் பீட்டர்சன் உருக்கம்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் பல…

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு எடுத்து வருகிறது.

தற்போது நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி சென்னை, மும்பை, அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் , கொல்கத்தா ஆகிய அணியை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”நான் மிகவும் நேசிக்கும் இந்தியா கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருவதை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; நீங்கள் இந்த பாதிப்பில் இருந்து விரைவில் வெளிவருவீர்கள்; இதிலிருந்து வெளி வரும் மனவலிமையுடன் இருப்பீர்கள். இந்த பெருந்தொற்று காலத்திலும் உங்களது அன்பும், பெருந்தன்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.